விளையாட்டு

ஐபிஎல்-லில் அறிமுகமாகிறது ஆட்டத்தை மாற்றும் ’பவர் பிளேயர்’ முறை!

webteam

ஐபிஎல் தொடரில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் ’பவர் பிளேயர்’ முறையை அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில், ஆட்டத்தின் போது பதிலி வீரரை தேவைப்படும்போது, களமிறக்கும் முறையை அமல்படுத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆடும் லெவனில் இடம்பிடிக்காத வீரர் ஒருவர், ஆட்டத்தின் சூழலுக்கு தேவைப்படும்போது, களம் இறங்கி விளையாட முடியும். 

இப்போது கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். கடைசி கட்டவீரர் பேட்டிங் செய்தால் அந்த ரன்களை குவிக்க முடியாத நிலை. அப்போது, அதிரடியாக விளையாடக் கூடிய, ஆடும் லெவனில் இல்லாத பதிலி வீரரை களமிறக்கிக் கொள்ளலாம். போட்டியை பரபரப்பாக்கும் விதமாக இந்த முறையை அமல்படுத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதன் இறுதி முடிவு, மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படுகிறது.