விளையாட்டு

இந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு

இந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு

webteam

சர்வதேச இந்திய அணிக்கான பயிற்சியாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. ஆனாலும் தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு பெரிய சறுக்கலாக 4வது இடத்தில் யாரை களமிறக்குவது என்ற பிரச்னை இருந்தது. இந்திய அணி அரையிறுதியில் தோற்ற போது, 4வது இடத்திற்கு சரியான  தேர்வு செய்யமால் உலகக் கோப்பையை சந்தித்தது தொடர்பாக பல சீனியர் கிரிக்கெட் வீரர்களும் பிசிசிஐ மற்றும் இந்திய பயிற்சியாளர்களை சாடினர். அத்துடன் அரையிறுதியில் தோனியை 4வது இடத்தில் களமிறக்காததும் பேசு பொருளானது. இதனால் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலமும் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்துவிட்டது. இதனால் புதிய பயிற்சியாளர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப்பட்டது.

அதன்படி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய சீனியர் (சர்வதேச) அணிக்கான தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஃபீல்டிங் பயிர்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சிகிச்சையாளர், வலிமை மற்றும் உடல்நிலை பயிற்சியாளர், நிர்வாக அதிகாரி ஆகிய பொறுப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.