உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் விதிகளை பின்பற்ற பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
பிசிசிஐ என்பது தேசிய விளையாட்டு அமைப்பு அல்ல என்றும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற தன்னாட்சி விளையாட்டு அமைப்பு எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மற்ற விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர்களைப் போன்று இந்திய கிரிக்கெட் வீரர்களையும் ஊக்கமருந்து சோதனை செய்ய வேண்டும் என தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் விதிகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கட்டுப்படுத்தாது என பிசிசிஐ கூறியுள்ளது.