விளையாட்டு

'இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரியான ஊதியம்' - ஜெய் ஷா அறிவிப்பு

JustinDurai

இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கு இனி ஒரே மாதிரியாக ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.   

இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட் அணி, மகளிர் கிரிக்கெட் அணி,  இளையோர் கிரிக்கெட் அணி ஆகிய அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நிர்வகித்து வருகிறது. இதில் ஆடவர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கே ஊதியம் அதிகமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் ஆடவர் மற்றும் மகளிர் அணி வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஒரே மாதிரியாக ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில், " இந்திய மகளிர் அணிக்கு, ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ.6 லட்சமும், டி20 ஆட்டங்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.

இதையும் படிக்கலாமே: முதல் சதத்தை பதிவுசெய்த தென்னாப்பிரிக்கா வீரர் -206 ரன்கள் இலக்கை அடைய தடுமாறும் வங்கதேசம்