விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

EllusamyKarthik

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி 5 முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். 

இந்திய அணியில் யார் யார்?

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, பும்ரா, சிராஜ், தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இவர்களை தவிர அன்கிட் ராஜ்புட், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்ப கவுதம் நெட் பவுலர்களாக இடம் பெற்றுள்ளனர். ஸ்டென்ட் பை வீரர்களாக கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷபாஸ் நதீம், ராகுல் சாஹர் மற்றும் பிரியங் பஞ்சல் இடம் பிடித்துள்ளனர். சென்னையில் நடைபெறும் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், அவருக்கு குழந்தை பிறந்துள்ள காரணத்தினால் அதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.