விளையாட்டு

அடுத்த 15 மாதங்கள் இந்திய கிரிக்கெட் அணி செம்ம பிசி - இதோ மொத்த டூர் லிஸ்ட்!

அடுத்த 15 மாதங்கள் இந்திய கிரிக்கெட் அணி செம்ம பிசி - இதோ மொத்த டூர் லிஸ்ட்!

jagadeesh

2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க இருக்கும் போட்டிகள் குறித்த அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. பின்பு அகமதாபாத்தில் இரண்டு டெஸ்ட்டும் நடைபெறுகிறது. அதன்பின்பு ஒருநாள், டி20 போட்டிகளுடன் இங்கிலாந்து தன்னுடைய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறது.

இதற்கடுத்து இந்திய வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு வரை இந்திய அணி 15 மாதங்கள் இடைவிடாத கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன்படி,

ஏப்ரல் - மே 2021

இந்தியன் ப்ரீமியர் லீக்

ஜூன் - ஜூலை 2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்தியா - இலங்கை (3 ஒருநாள், 5 டி20)
ஆசிய கோப்பை

ஜூலை 2021

இந்தியா - ஜிம்பாப்வே (3 ஒருநாள்)

ஜூலை - செப்டம்பர்

இந்தியா - இங்கிலாந்து (5 டெஸ்ட்)

அக்டோபர் 2021

இந்தியா - தென் ஆப்பிரிக்கா (2 ஒருநாள், 5 டி20)

அக்டோபர் - நவம்பர் 2021

ஐசிசி டி20 உலகக் கோப்பை

நவம்பர் - டிசம்பர் 2021

இந்தியா - நியூசிலாந்து (2 டெஸ்ட், 3 டி20)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா (3 டெஸ்ட், 3 டி20)

ஜனவரி - மார்ச் 2022

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் (3 ஒருநாள்,3 டி20)
இந்தியா - இலங்கை (3 டெஸ்ட், 3 டி20)

ஏப்ரல் - மே 2022

இந்தியன் ப்ரீமியர் லீக்

ஜூலை - ஆகஸ்ட் 2022

இந்தியா - இங்கிலாந்து (3 ஒருநாள், 3 டி20)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் (3 ஒருநாள், 3 டி20)

செப்டம்பர் 2022

ஆசியக் கோப்பை

அக்டோபர் - நவம்பர் 2022

ஐசிசி டி20 உலகக் கோப்பை

நவம்பர் - டிசம்பர் 2022

இந்தியா - வங்கதேசம் (2 டெஸ்ட், 3 டி20)
இந்தியா - இலங்கை (5 ஒருநாள்)

ஜனவரி 2023

இந்தியா - நியூசிலாந்து (3 ஒருநாள், 3 டி20)

பிப்ரவரி - மார்ச் 2023

இந்தியா - ஆஸ்திரேலியா (4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20)