விளையாட்டு

தினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ

தினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ

webteam

தினேஷ் கார்த்திக்கின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸில், கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் போது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அமர்ந்திருந்தார். அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லமுடன் தினேஷ் கார்த்தி இருக்கும் புகைப்படங்கள்  இணையத்தில் பரவின. 

டிரின்பாகோ அணியின் ஜெர்ஸி அணிந்து அவர் இருந்ததால், பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது எனக்கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 'அனுமதி இன்றி அங்கு சென்றதால், உங்கள் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?' என்று கேள்வி எழுப்பி இருந்தது. 

இதற்குப் பதிலளித்த தினேஷ் கார்த்திக், இந்நிலையில் பிசிசிஐ-யின் நோட்டீசுக்கு தினேஷ் கார்த்திக் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம்தான், டிரின்பாகோ அணிக்கும் பயிற்சியாளர். அவர் அழைப்பின் பேரிலேயே நான் அங்கு சென்றேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் அங்கு சென்றது தவறுதான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

தினேஷ் கார்த்திக்கின் விளக்கத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள பிசிசிஐ, இந்த விவகாரம் முடித்துவைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.