கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.
அதனை பல்வேறு தருணங்களில் நிரூபித்தும் காட்டியுள்ளார். பிளேயிங் லெவனில் ஆடும் வீரர்களில் ஆரம்பித்து தான் தலைமை தாங்குகின்ற அணியின் வெற்றிக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்குவார்.
இந்த பாணியை உள்ளூர் கிரிக்கெட் துவங்கி உலக கிரிக்கெட் வரை தோனி கடைபிடிப்பார்.
ஐபிஎல் தொடரில் சென்னை எட்டு முறை பைனல் வரை முன்னேறவும் தோனியின் கேப்டன்சி தான் காரணம்.
அதனை மும்பை அணியுடனான இன்றைய முதல் ஆட்டத்திலேயே மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் தோனி.
ரெய்னா இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பதில் ஆரம்பித்து பல சவால்கள் தோனியின் முன்னாள் இருந்தன. அதையெல்லாம் களைந்து பிளேயிங் லெவனை தேர்வு செய்தார் தோனி.
ஸ்பின்னர்களை சரியாக பய்னபடுத்தி மும்பையின் பேட்டிங் இன்னிங்க்ஸை டோட்டல் டேமேஜ் செய்தார் தோனி.
டிகாக் அதிரடி சரவெடியாக பந்துகளை அடித்து நொறுக்க 200 ரன்களை மும்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தை மாற்றி கட்டுப்படுத்தினார். சாவ்லாவை பவர் பிளேயில் பந்து வீச சொல்லி நன்றாக பயன்படுத்தி ரோகித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய சவுரப் திவாரி மும்பைக்காக ரன் குவிப்பில் ஈடுபட அவரையும் ஜடேஜா மூலம் வியூகம் வகுத்து வீழ்த்தினார்.
சென்னை அணிக்கு சாவ்லா மட்டுமே எக்கானமியாக பந்து வீசினார். மற்ற அனைத்து பவுலர்களும் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தாலும் பீல்டர்களை சரியான இடத்தில் பிளேஸ் செய்து டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்யும் அணிகள் சராசரியாக 167 ரன்களை அபுதாபி மைதானத்தில் குவிப்பது வழக்கம்.
அதை தனது கேப்டன்சி மூலம் மாற்றுக்காட்டி மும்பையை 162 ரன்களில் சுருட்டினார் தோனி. 436 நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் கேப்டன்ஷியை கண்டு அவரகளது ரசிகர்கள் சிலிர்த்து போனார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் அசத்தலான கேட்ச் ஒன்றும் முக்கியமானது.