விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக நரிந்தர் பத்ரா தேர்வு

webteam

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக நரிந்தர் பத்ரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் நரிந்தர் பத்ரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ராஜீவ் மேத்தா மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இருவரும் நான்கு ஆண்டுகள் பதவி வகிப்பர். 59 வயதாகும் நரிந்தர் பத்ரா ஏற்கனவே ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர்‌ உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் ஆவார். ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதை இலக்காக கொண்டு பணியாற்றப் போவதாக தேர்வு செய்யப்பட்ட பின் நரிந்தர் பத்ரா கூறினார். இந்திய அணி ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்வது குறித்தும் திட்டமிட இருப்பதாக நரிந்தர் பத்ரா கூறினார்.