விளையாட்டு

பகலிரவு டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பந்துவீச்சு

webteam

இந்தியா- வங்கதேசம் இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா - வங்கதேசம் இடையிலான பகலிரவு டெஸ்ட், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இல்லை. பங்களாதேஷ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியில் முதல் முறையாக எஸ்.ஜி நிறுவனத்தின் பிங்க் நிறப் பந்துகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பிங்க் பந்தை தயாரிக்க எஸ்.ஜி. நிறுவனம் 8 நாள்கள் வரை எடுத்துக் கொள்கிறது. இப் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்து 22.5 சென்டி மீட்டர் வரை சுற்றளவும், 156 கிராம் எடையும் கொண்டதாக இருக்கிறது.

சிவப்பு பந்துகள் வெள்ளை நிற நூலால் தைக்கப்பட்டிருக்கும் வேளையில், பிங்க் பந்துகள் கருப்பு நூலால் பிணைக்கப்பட்டிருக்கும். இரவு வேளையில் பளபளப்புடன் இருக்க பந்துகள் அரக்கு பூசப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட ரப்பர், கார்க் மூலம் பிங்க் பந்துகள் வடிவமைக்கப்படுகின்றன.