மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷ் நடத்துகிறது.
பங்களாதேஷ் 2009-ம் ஆண்டு இலங்கை, ஜிம்பாப்வே பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிப்பெற்றது. இதற்கு பிறகு இந்தப் போட்டியை நடத்தவில்லை. இந்நிலையில் ஜனவரி மாதம் இந்தப் போட்டியை நடத்துகிறது.
ஜனவரி 15-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை மோத வேண்டும். இறுதிப் போட்டி ஜனவரி 27-ம் தேதி நடக்கிறது. பகலிரவு ஆட்டமாக இப்போட்டிகள் நடக்கும்.