வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 328 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி 458 ரன்களை எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி பேட் செய்த போது 37-வது ஓவரை டஸ்கின் அகமது வீசி இருந்தார். அந்த ஓவரின் 5-வது பந்தை ராஸ் டெய்லர் எதிர்கொண்டார். அது Full-லென்த் டெலிவரியாக வீசப்பட்டது இருந்தது. இருப்பினும் பந்து பேட்டில் பட்டதா? Pad-இல் பட்டதா? என்ற சந்தேகம் வங்கதேச வீரர்களுக்கு வந்தது. பின்னர் LBW இருக்கலாம் என்ற யூகத்தில் வங்கதேச அணி ரிவ்யூ எடுத்தது. அப்போது பந்து தெளிவாக பேட்டில் பத்திருப்பது உறுதியானது. அதோடு வங்கதேச அணி அனைத்து ரிவ்யூ வாய்ப்புகளையும் இழந்திருந்தது.
இந்த நிலையில் ‘கிரிக்கெட் உலகில் மிகவும் மோசமான ரிவ்யூ இது’ என ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் அதனை விமர்சித்திருந்தனர்.