விளையாட்டு

இன்று கடைசி லீக்: ஷகிப் வரவு பங்களாதேஷுக்கு கை கொடுக்குமா?

இன்று கடைசி லீக்: ஷகிப் வரவு பங்களாதேஷுக்கு கை கொடுக்குமா?

webteam

முத்தரப்பு டி20 தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, பைனலில் இந்திய அணியுடம் மோதும்.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்த தொடரின் 6-வது மற்றும் கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில் இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலையில் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டியில் இடம் பெறும்.

காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத பங்களாதேஷ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பியுள்ளார். இன்றைய போட்டிக்கு அவரே கேப்டனாக செயல்படுவார். அவர் வருகையால் அந்த அணி உத்வேகம் அடைந்துள்ளது. அதோடு அந்த அணியில் முஷிஃபிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி வருகிறார். 

இலங்கை அணி உள்ளூரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.