விளையாட்டு

தோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் !

தோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் !

jagadeesh

இந்தியா உடனான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க பங்களாதேஷ் அணி போராடி வருகிறது.

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் சேர்த்திருந்தது. இளம் வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசியிருந்தார். 

மூன்றாம் நாளான இன்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். இதன் மூலம், இந்தியாவை விட 343 ரன்கள் பின் தங்கிய நிலையில், பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை‌ சமாளிக்க முடியாமல் அந்த அணி திணறி வருகிறது. 

பங்களாதேஷ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ‌ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. முஷ்ஃபிகிர் ரஹீமும், மெஹதி ஹசனும் களத்தில் இருக்கின்றனர்.