விளையாட்டு

காதலியை மணந்தார் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்

காதலியை மணந்தார் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்

webteam

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் மெஹிடி ஹாசன் தனது நீண்ட நாள் காதலியை நேற்று முன் தினம் திருமணம் செய்தார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர், மெஹிடி ஹாசன். ஆல் ரவுண்டரான இவர், சமீபத்தில் நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத் தில் இருந்து உயிர் தப்பிய பங்களாதேஷ் வீரர்களில் ஒருவர். அந்தச் சம்பவத்தில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 50 பேர் உயிரிழந் தனர். இதில் இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். 

சில நிமிட நேரங்களில், அந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருந்து பங்களாதேஷ் வீரர்கள் உயிர் தப்பினர். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பங்களாதேஷ் வீரர், மெஹிடி ஹாசன் தனது நீண்ட நாள் காதலி, ரமேயா அக்தர் பிரித்தியை வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

பங்களாதேஷின் தென்மேற்கு பகுதியான குல்னாவில் இந்த திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இத்தகவலை முகநூலில் அவர் தெரிவித்துள்ளார்.