ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்தது. பின்னர், ரஹிம் 21, மோர்டஸா 26 எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், வங்கதேசம் அணி 101 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
ஆனால், ஹசன் மிரஸின் சிறப்பான ஆட்டத்தால் கடைசியில் வங்கதேசம் அணி ரன்களை சேர்த்தது. மிரஸ் 50 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிரஸ் விக்கெட்டை தொடர்ந்து 49.1 ஓவரில் வங்கதேசம் 173 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஓராண்டிற்கு பின்னர் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா 4 விக்கெட்கள் சாய்த்தார். புவனேஸ்வர், பும்ரா தலா 3 விக்கெட் எடுத்தனர்.
இங்கிலாந்து தொடரில் நடந்ததை போல், இந்தப் போட்டியிலும் இந்திய அணி கடைசி நேரத்தில் ரன்களை கொடுத்தது. 101 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் 130 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வங்கதேசம் அணி அதன்பிறகு 70 ரன்கள் எடுத்தது.