தமிழ்நாடு பிரிமியர் லீக், டி 20 கிரிக்கெட் தொடரில், காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு பிரிமியர் லீக், டி 20 கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் தொடரின் 3-வது தொடர், ஜூலை 11 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட் ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.
இதில் காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘ஆரம்பத்தில் இருந்தே காரைக்குடி அணியுடன் நான் இருக்கிறேன். முதல் போட்டியில் கேப்டனாக இருந்தேன். இப்போது பயிற்சியாளர் ஆகி இருக்கிறேன். அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார்.