விளையாட்டு

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பத்ரிநாத்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பத்ரிநாத்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான, தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன் பத்ரிநாத் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். 38 வயதான பத்ரிநாத் 2008-ல் இருந்து 2011-வரை இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒரு நாள் போட்டி, மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி இருக்கிறார். 

145 முதல் தர போட்டியில் ஆடியுள்ள அவர் 32 சதம், 45 அரைசதம் உட்பட 10,245 ரன்கள் குவித்துள்ளார். பத்ரிநாத் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு காரைக்குடி காளை அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டில் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார்.

அவர் கூறும்போது, ‘கிரிக்கெட்டில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறேன். நான் ஆடிய விதமும் எனது செயல்பாடும் மன நிறைவாக இருக்கிறது. அதனால் ஓய்வு பெறுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை’ என்று தெரிவித்தார்.