விளையாட்டு

சாய்னா - கஷ்யப் ஜோடி டிசம்பரில் திருமணம்?

சாய்னா - கஷ்யப் ஜோடி டிசம்பரில் திருமணம்?

webteam

பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும், பாருபள்ளி கஷ்யப்பும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த இவருக்கு, தற்போது 28 வயதாகிறது. பேட்மிண்டன் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்தியாவிற்காக இவர் ஒலிம்பிக்கில் பதக்கங்களும் வென்றுள்ளார். அத்துடன் ஆசியப்போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றவர். இவர் கடந்த பந்து ஆண்டுகளாக கஷ்யப் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. கஷ்யப்பும் பேட்மிண்டன் வீரர் தான். 32 வயது நிரம்பிய இவர், இந்திய ஓபன் போட்டிகளில் தங்கம் வென்றவர்.

இந்நிலையில் இருவரும் இந்தாண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரது குடும்பத்தினரின் விருப்பத்துடன் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 16ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும், குறிப்பிட்ட 100 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் திருமணத்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் அதே மாதம் 21ஆம் தேதி பிரம்மாண்டமாக வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்தத் திருமணம் மணமகன் ஊரான ஹைதராபாத்தில் நடைபெறலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.