விளையாட்டு

நாங்க சரியா விளையாடல: சொல்கிறார் ஆஸி.விக்கெட் கீப்பர்

நாங்க சரியா விளையாடல: சொல்கிறார் ஆஸி.விக்கெட் கீப்பர்

webteam

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோது கடைசி ஒரு நாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. சரியாக ஆடாததால் கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட விக்கெட் கீப்பர் மேத்யூ வாட், இந்தப் போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. 

இதுபற்றி அவர் கூறும்போது, ’இன்று நடக்கும் கடைசி போட்டி எங்களுக்கு முக்கியம். வெளிநாடுகளில் எங்கள் அணியின் செயல்பாடு பற்றி அதிகமாக பேசியாகிவிட்டது. அதனால் இந்தப் போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. கடந்த சில போட்டிகளில் நான் உட்பட எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாட வில்லை. இந்தப் போட்டியில் வெற்றிபெற்று மகிழ்ச்சியுடன் விடைபெறுவோம் என நினைக்கிறேன். நான் சரியாக விளையாடாததால் கடந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டேன். நான் மீண்டும் அணியில் தொடர வேண்டுமென்றால் அதிகமாக ரன் குவிக்க வேண்டும் என்று எங்கள் அணியின் தேர்வுக் குழுவினர் கூறியுள்ளனர். பொதுவாக இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் நன்றாக ஆடியிருக்கிறேன். இன்றும் நன்றாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறேன்’ என்றார்.