ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியின் தகுதிச் சுற்றில் இருந்து அதிர்ஷ்டவசமாக முதல் சுற்றில் விளையாட தகுதிப் பெற்றார் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன். முதல் சுற்றில் ஜப்பானின் டட்சுமா இடோவை எதிர்கொண்ட பிரஜ்னேஷ் 4-6, 2-6, 5-7 என நேர் செட்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்தப் போட்டியில் வென்று இருந்தால் இரண்டாவது சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரபல சாம்பியன் ஜோகோவிச்சை எதிர்கொண்டிருப்பார் பிரஜனேஷ் குணேஸ்வரன்.