விளையாட்டு

சிட்னி டெஸ்டின் 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசிய கவாஜா: இமாலய இலக்கை விரட்டும் இங்கிலாந்து

EllusamyKarthik

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகின்றன. 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி நடப்பு தொடரை வென்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா. 

முதல் இன்னிங்ஸில் 137 ரன்களை அவர் குவித்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸிலும் 101* ரன்களை குவித்தார் அவர். இதன் மூலம் சிட்னி மைதானத்தில் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். கேமரூன் க்ரீனுடன் 181 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கவாஜா. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா. இந்த போட்டியில் ஒருநாள் ஆட்டம் (நாளை) எஞ்சியிருக்க இங்கிலாந்து வெல்வது மிகவும் கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கிலாந்து அணி போட்டியை சமனில் முடிக்க முயலும். மறுபக்கம் ஆஸ்திரேலியா தொடரை 4 - 0 என வெல்ல முயற்சி செய்யும்.