விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி

webteam

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலியது அணி

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை உறுதி செய்த ஆஸ்திரேலிய அணி சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தது. 465 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 244 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.