விளையாட்டு

வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி

வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி

webteam

பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியா‌சத்தில் வெற்றி பெற்றது.

சிட்டகாங் நகரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 305 ரன்களும், ஆஸ்திரேலியா 377 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி, 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹீம் 31 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை சாய்த்த நாதன் லியோன், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 86 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதனையடுத்து ‌இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.