விளையாட்டு

'டாஸ்' வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா! அதிரடி காட்டி இலங்கையை வீழ்த்துமா?

JustinDurai

இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.  

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 'சூப்பர் 12' சுற்றில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் பெர்த் ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியிருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து இலங்கை அணி வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இலங்கை அணி களம் காண்கிறது.