விளையாட்டு

ஆஸி.க்கு எதிராக கடைசி டெஸ்ட்:  முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்-அவுட்

JustinDurai

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி  33 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து விளையாடி வந்த இந்திய அணி, 111.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன்கள் இந்தியா பின் தங்கியுள்ளது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 67 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. 6 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி  21/0 ரன்கள் எடுத்துள்ளது  டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் களத்தில் ஆடி வருகின்றனர்.