விளையாட்டு

பவுலிங்கில் மிரட்டிய இங்கிலாந்து - 223 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா

பவுலிங்கில் மிரட்டிய இங்கிலாந்து - 223 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா

webteam

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ஹெச்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் 0(1) அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 9 (11) ரன்களில் வெளியேறினார். 

இதற்கிடையே வந்த ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் கைகோர்த்த பீட்டர் ஹாண்ட்ஸ்கோம் 4 (12) ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பின்னர் வந்த அலெக்ஸ் கரே தாடை அடிபட்டாலும் காயத்துடன் 46 (70) ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து வந்தவர்களில் மேக்ஸ்வெல் 22 (23) மற்றும் மிட்ஜெல் ஸ்டார்க் 29 (36) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். 48வது ஓவர் வரை போராடிய ஸ்மித் 85 (119) ரன்கள் குவித்தார். 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 223 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியில் கிரிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஹித் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.