விளையாட்டு

பேட்டிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா.. 187 ரன்களை சேஸ் செய்து தொடரை வெல்லுமா இந்தியா?

JustinDurai

ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எதுவும் எடுக்காமல் 4 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 52 ரன்களும், டிம் டேவிட் 54 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எதுவும் எடுக்காமல் 4 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடிவருகிறது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.