விளையாட்டு

6 உலகக்கோப்பைகளை வென்ற ஆஸி. வீராங்கனை ஓய்வு அறிவிப்பு

6 உலகக்கோப்பைகளை வென்ற ஆஸி. வீராங்கனை ஓய்வு அறிவிப்பு

JustinDurai

ஆறு முறை உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ். இதுவரை 6 டெஸ்ட், 77 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010, 2012, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்களிலும், 2013 மற்றும் 2022இல் நடந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இந்த தொடர்களில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் முக்கிய பங்காற்றி வந்தார். இந்நிலையில் தற்போது 35 வயதான ரேச்சல் ஹெய்ன்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: "இந்த இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும்"- அணி தேர்வு குறித்து ஆதரவாக ’கவாஸ்கர்’ பேச்சு