விளையாட்டு

பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி: எத்தனை ஆண்டுகள் கழித்து தெரியுமா?

கலிலுல்லா

பாகிஸ்தானில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

வரும் 4ஆம் தேதி முதல் பாகிஸ்தான் அணியுடன் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டிவென்டி-20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. இதற்காக அந்நாட்டு அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை பாகிஸ்தானில் அந்நாட்டு அணி தங்கி விளையாட உள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்ற ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அதன்பிறகு 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

கடந்த 2009 ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியினர் சென்ற பேருந்து மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தை அடுத்த அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மற்ற நாட்டு அணிகள் தயங்கி வந்தன. 5 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆயத்தமான நிலையில், லாகூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதால் அந்த பயணம் ரத்தானது.