ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பாவிடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 42, ஷிகர் தவான் 96 ரன்கள் எடுத்தனர். கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி 78 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடந்த ஒருநாள் போட்டியிலும் ஸம்பா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி விராட் கோலி ஆட்டமிழந்தார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் ஸம்பா உடன் விராட் கோலி விளையாடியுள்ளார். இதில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் அவர் ஸம்பாவிடம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.