விளையாட்டு

கிரவுண்டில் இருக்கும்போதே மோசமான உடல் நிலை! ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி!

Rishan Vengai

பெர்த்தில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கிடையேயான மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது பாண்டிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதிகாலையில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மதிய உணவு நேரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் பெர்த்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பாண்டிங் தனது செவன்ஸ் நெட்வொர்க் வர்ணனைப் பணிகளை இன்று ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடத்தினார், அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பாண்டிங்கிற்கு இதயம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால், அவரது உடல்நிலை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

47 வயதான அவர், முந்தைய 40 நிமிடங்களுக்கு ஒளிபரப்பில் இருந்ததால், மதிய உணவின் போது, செவன் வர்ணனைப் பெட்டியிலிருந்து வெளியேறினார். மேலும் எந்த உதவியும் தேவையில்லை என்று கூறி, அவருடைய நெருங்கிய நண்பரும் முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கரின் காரில் சென்று முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதற்கு பின்னர் நாள் முழுவதும் அவர் திரும்பி வரவில்லை. ஆனால் அவர் மருத்துவமனையில் நலமாக இருப்பதாக சக ஊழியர்களிடம் தெரியபடுத்தியாக தெரிகிறது.

மூன்றாவது நாள் ஆட்டத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், "ரிக்கி பாண்டிங்கின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். நாங்கள் இன்று காலை களத்தில் அவருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். எல்லா தெரிவுகளின் படி அவர் நன்றாக இருக்கிறார் என்று தெரிகிறது. பயப்படும்படியாக எதுவும் இருக்ககூடாது, எனவே நாங்கள் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.

2020ல் டீன் ஜோன்ஸ் இறந்ததைத் தொடர்ந்து, மற்றும் சமீபத்தில் ஷேன் வார்னின் மரணம், பின்னர் ரியான் கேம்ப்பெல் ஹார்ட் அட்டாக்கிற்கு பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர்களைச் சுற்றி உடல்நலப் பிரச்சினைகள் குறித்து அதிக விழிப்புணர்வு எழுந்துள்ளது.