விளையாட்டு

பாக்சிங் டே டெஸ்ட் : இந்தியா VS ஆஸ்திரேலியா : மூன்றாம் நாள் ஆட்டம் எப்படி?

EllusamyKarthik

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 195 ரன்களும், இந்தியா 326 ரன்களும் குவிந்துள்ளன. கேப்டன் ரஹானேவின் சதம் இந்திய அணிக்கு வலுவான முன்னிலையை கொடுத்தது. 

இந்த ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 277 ரன்களுடன் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் முதல் 23 ஓவர்களில் 326 ரன்களை குவித்து எஞ்சியிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா. 

இதையடுத்து 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. பேர்ன்ஸ், லபுஷேன், ஸ்மித், மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் என ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதோடு 66 ஓவர்கள் விளையாடி 133 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் இரண்டு ரன்கள் இந்த ஆட்டத்தில் லீட் எடுத்துள்ளது. இந்திய அணி பவுலர்கள் நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை விரைந்து அவுட் செய்கிறார்களோ அதே வேகத்தில் இந்தியாவின் வெற்றியும் உறுதியாகும். ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் கேமரூன் கிரீன் முதல் தர கிரிக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ளார். அதை இந்திய அணி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இன்றைய நாளை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் இரு அணி பவுலர்களும் விக்கெட் மழை பொழிந்துள்ளனர். மொத்தமாக 11 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. மெல்பேர்ன் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக திரும்பி வருகிறது.