இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட்டில் காபா மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தன.
ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு நேர இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 149 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதன் மூலம் இந்த போட்டியில் 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், மார்க்கஸ் ஹாரிஸும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 89 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடினர். அவர்களது விக்கெட்டை தாக்கூரும், வாஷிங்டன் சுந்தரும் அடுத்தடுத்து வீழ்த்தினர். 7 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா.
தொடர்ந்து வந்த மார்னஸ் லபுஷேன் மற்றும் மேத்யூ வேட் சிராஜின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் கிரீஸுக்கு வந்த கேமரூன் கிரீனுடன் ஸ்மித் நிதானமாக விளையாடி வருகிறார்.
நன்றி : பிசிசிஐ