இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 237 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் குவித்தது. 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் என 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து. டேவிட் மலன் மற்றும் கேப்டன் ஜோ ரூட் இணை 3-வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது. மலன் 80 ரன்களிலும், ரூட் 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள், ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பினர். அந்த அணி 236 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 237 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, பாலோ ஆன் அளிக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.
ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 282 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.