விளையாட்டு

ஊக்கமருந்தை தடுக்காவிட்டால் தடகளப் போட்டி மரணமடையும்: உசைன் போல்ட்

ஊக்கமருந்தை தடுக்காவிட்டால் தடகளப் போட்டி மரணமடையும்: உசைன் போல்ட்

webteam

விளையாட்டுப் போட்டிகளில், ஊக்கமருந்து பயன்படுத்துவோர் கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தடகள வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். 

தமது கடைசி போட்டிக்கு முன்பாக லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போல்ட், ஓய்வுக்குப் பிறகு உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும் தனக்குப் பிறகு தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த வான் நீகெர்க், அடுத்த சாம்பியனாகத் திகழ்வார் என்று போல்ட் தெரிவித்தார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில், ஊக்கமருந்து பயன்படுத்துவோர் கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் தடகளப் போட்டி மரணமடையும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ள உசைன் போல்ட், லண்டனில் நாளைமறுதினம் முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் பங்கேற்கிறார்.