விளையாட்டு

நம்ப முடிகிறதா..! - கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்ளோ வருமானமா?

நம்ப முடிகிறதா..! - கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்ளோ வருமானமா?

rajakannan

சமூக வலைத்தளங்கள் தற்போது அதிக வருமானம் ஈட்டக் கூடிய ஒன்றாக மாறிவருகின்றன. யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்து பலரும் லட்சக்கணக்கான ரூபாயை எளிதில் சம்பாதித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, இன்ஸ்டாகிராமும் இணைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் நாம் போடு பதிவுகளுக்கு வருமானம் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், இன்ஸ்டாகிராமில் சாதாரணமாக உள்ளவர்கள் எளிதில் வருமானம் ஈட்ட முடியாது. பிரபலமாக உள்ள நடிகர்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் இதில் கோடிக்கணக்கில் வருமானம் அள்ளுகின்றனர்.

அதாவது ஒரு பிரபலபத்தை எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள்? அதில் அவர்களது போஸ்டை எத்தனை பேர் ஷேர் செய்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில், 2018ம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஹோப்பர்எச்கியூ.காம் என்ற இணையத்தளப்பக்கம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் நட்சத்திரங்களின் கணக்கு, ஃபாலோயர்கள், பதிவுகள்; அதற்கான கால இடைவெளி என பலவற்றை அலசி ஆராய்ந்து இந்தத் தகவலை வெளியிட்டது. இதில் அமெரிக்க டெலிவிஷன் பிரபலம் கெய்லி ஜென்னர் முதலிடத்தில் உள்ளார். அவர் தனது ஒரு போஸ்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுகிறார். 

இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 17வது இடத்தில் உள்ளார். விராட் கோலி தனது ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு 1,20,000 அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 82.45 லட்சம் ஆகும். ஆண்டுக்கு 9.894 கோடி ரூபாய் வருமானம்.

விராட் கோலியை 2 கோடியே 32 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு அடுத்து அதிகம் பிரபலமான திறமை வாய்ந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் விளம்பரங்களிலும் நடித்து அதிக வருமானம் ஈட்டுகிறார். 

இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ(3), நெய்மர்(8), மெஸ்சி(9) ஆகியோர் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளனர்.