விளையாட்டு

வெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..!

Rasus

18-ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இப்போட்டியில் ஜப்பான் அணி தங்கப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

இதேபோல ஸ்குவாஷ் ஆடவர் குழு போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்திய அணி இதுவரை 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. 118 தங்கம், 85 வெள்ளி, 60 வெண்கலம் என 263 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் தொடர்கிறது. மொத்தம் 189 பதக்கங்களுடன் இந்த அட்டவணையில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முன்னதாக ஆசிய விளையாட்டு‌ போட்டியில் வெ‌ள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த‌ ஆரோக்கிய ரா‌ஜீவ்‌‌ மற்றும் தருண் ஆகிய இருவருக்கும் ‌தலா 30 லட்ச‌ம் ரூபாய் ஊக்க தொகை அறி‌வித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 4X400 மீட்டர் ஆடவர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், தருண் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.