ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 2வது நாளாக நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் லட்சுமணன் 14 நிமிடம் 54.48 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில், ஒரே நாளில் இந்தியாவுக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு உஹானில் நடைபெற்ற போட்டில் லட்சுமணன் வெண்கலப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.