விளையாட்டு

இந்தியா v/s பாகிஸ்தான் மோதல் - அணிக்கு திரும்பினார் பும்ரா

இந்தியா v/s பாகிஸ்தான் மோதல் - அணிக்கு திரும்பினார் பும்ரா

webteam

ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை வென்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பதால் ஸ்டேடியம் நிரம்பியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இன்றைய போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேற்றைய போட்டியில் இந்திய அணி 285 ரன்கள் எடுத்த போதிலும், ஹாங்காங் அணியை தோற்கடிப்பது கடினமான செயலாக மாறிவிட்டது. ஒருகட்டத்தில் இந்திய அணி தோற்றுவிடும் என்ற நிலை உருவாகி, பின்னர் எப்படியோ ஜெயித்துவிட்டது. இதற்கு காரணம் அணியில் வலுவான பந்துவீச்சாளர்கள் இல்லை எனக்கூறப்பட்டது. அத்துடன் இந்த அணி பாகிஸ்தானுடன் எப்படி களம் காணும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.