விளையாட்டு

பெங்களூரு டெஸ்டில் வரலாறு படைத்த அஸ்வின்

பெங்களூரு டெஸ்டில் வரலாறு படைத்த அஸ்வின்

webteam

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

பெங்களூரு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்திய போது இந்தச் சாதனையை அஸ்வின் படைத்தார். மேலும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலிலும் அஸ்வின் 5ஆவது இடத்தை பிடித்தார். 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிஷன் சிங் பேடியின் முந்தைய சாதனையை அ‌ஷ்வின் முறியடித்தார். இதேபோல இன்றைய போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், 25ஆவது முறையாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் குறைவான டெஸ்ட் போட்டிகளில் 25 முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 47 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், 62 போட்டிகளில் 25 முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லியின் சாதனையை முறியடித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வின், ’எனது வாழ்வில் மறக்கமுடியாத டெஸ்ட் போட்டி’ என புகைப்படத்துடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.