விளையாட்டு

ஜோ ரூட் விக்கெட்டை 'வேருடன் பிடிங்கிய' அஸ்வின்! - மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த கோலி

ஜோ ரூட் விக்கெட்டை 'வேருடன் பிடிங்கிய' அஸ்வின்! - மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த கோலி

jagadeesh

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை 17 ரன்களில் அஸ்வின் வீழ்த்தியதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவதுப் போட்டியில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லேவை டக் அவுட் ஆக்கினார் இஷாந்த் சர்மா. இதன்மூலம் தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார் இஷாந்த் சர்மா. அடுத்து வந்த ஜானி பேரிஸ்டோவை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார் அக்ஸர் படேல்.

இந்திய அணிக்கு மேலும் உத்வேகம் தரும் விதமாக கேப்டன் ஜோ ரூட் 17 ரன்கள் எடுத்திருந்தபோது தன்னுடைய சுழலில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் அஸ்வின். இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியதால் கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆர்ப்பரித்தார்.

இதனையடுத்து அரைசதமடித்த கிராவ்லி 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல் நாள் தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருக்கிறது.