விளையாட்டு

அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு

அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு

webteam

இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடர் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான மூன்று டி20 தொடர் போட்டிகள் வரும் வரும் ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த மூன்று டி20 தொடர் போட்டிகளிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா மற்றும் பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்வுக் குழு மற்றும் அணி நிர்வாகம் நடத்திய ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 26-ஆம் தேதி கான்பூரில் நடக்கிறது.