விளையாட்டு

ஆஷஸ் தொடரில் இடம்பிடித்த ஆர்ச்சர் - ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டன்

ஆஷஸ் தொடரில் இடம்பிடித்த ஆர்ச்சர் - ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டன்

rajakannan

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். உலக அளவில் இந்த இருநாடுகளுக்கு இடையிலான போட்டியை அதிக பேர் உற்று நோக்குவார்கள். இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு இணையானது இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் உலக அளவில் அதிகம் பேசப்படும் ஒன்று.

ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரூட் தலைமையிலான 14 பேர் கொண்ட இந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சரும் இடம்பெற்றுள்ளார். 24 வயதான ஆர்ச்சருக்கு இது முதலாவது டெஸ்ட் தொடர். இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்ல ஆர்ச்சர் மிகவும் உறுதியாக இருந்தார். முக்கியமாக இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவர் அவர் அற்புதமாக வீசினார். உலகக் கோப்பை மொத்தம் 20 விக்கெட்களை அவர் வீழ்த்தியிருந்தார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எட்ஸ்பாஸ்டனில் தொடங்குகிறது. இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டனாக தொடர்கிறார். 

இங்கிலாந்து அணி விவரம்:

ஜோ ரூட், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சம் கர்ரன், ஜோ டென்லி, ஜாஸன் ராய், ஒல்லி ஸ்டோன், கிரிஸ் வோக்ஸ்