அர்ஜூனா விருது முகநூல்
விளையாட்டு

அர்ஜூனா விருது பெற்ற வீரர் - வீராங்கனைகள் யார் யார்?

தமிழகத்தைச் சேர்ந்த சஜன் பிரகாஷ் உட்பட, அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ள வீரர் - வீராங்கனைகள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்...

PT WEB

தடகள வீராங்கனைகளான ஜோதி யாரர்ஜி, அன்னுராணி, குத்துச்சண்டை வீராங்கனைகளான நீது கங்காஸ், சவீட்டி, செஸ் பெண் கிராண்ட்மாஸ்டர் வந்திகா அகர்வால் ஆகியோர் அர்ஜூனா விருது பெறவுள்ளனர். ஹாக்கி வீராங்கனை சலீமா, ஹாக்கி வீரர்களாள அபிஷேக், சஞ்சய், ஜர்மன்பீரித் சிங் , சக்ஜீத் சிங் ஆகியோரும் அர்ஜுனாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி வில்வித்தை வீரரான ராகேஷ் குமார், மாற்றுத்திறனாளி வீரர்களான ப்ரீதி பால், ஜீவன்ஜி தீப்தி, அஜீத் சிங், சச்சின் சர்ஜே ராவ் கிலாரி, தரம்பீர் சிங், ப்ரனவ் சூர்மா , ஹோக்கட்டோ செமா ஆகியோரும் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை சிம்ரன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார், தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி ஜூடோ மாற்றுத்திறனாளி துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மோனா அகர்வால் , பேமிண்டன் வீராங்கனை ரூபினா பிரான்சிஸ், துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் சுவப்னில் சுரேஷ் குசாலே, சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது.

ஸ்குவாஷ் வீரர் அபய்சிங், நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ், மல்யுத்த வீரர் அமன் ஆகியோருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது. கேல் ரத்னா விருது பெறுவோருக்கு 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், அர்ஜுனா விருது பெறுவோருக்கு 15 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.