விளையாட்டு

வெற்றி மகிழ்ச்சியில் மேலாடையை கழற்றிய அர்ஜென்டினா ரசிகை - கைது செய்யப்படுவாரா?

JustinDurai

கத்தாரில் கால்பந்து இறுதிப் போட்டியின்போது அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடிய அந்நாட்டு ரசிகை ஒருவர் மேலாடையை கழற்றி சுழற்றிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் அசத்திய அர்ஜென்டினா அணி, பிரான்சை சாய்த்து கோப்பை வென்றது. 36 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக உலகக் கோப்பை வென்ற மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணியினரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இதனிடையே இறுதிப்போட்டியின்போது  அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடிய அந்நாட்டு ரசிகை ஒருவர் மேலாடையை கழற்றி சுழற்றிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் நாட்டு சட்டத்திட்டங்களின் படி பொதுவெளியில் எவரேனும் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். கால்பந்து தொடரை கண்டுகளிக்க வரும் வெளிநாட்டு பார்வையாளர்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கத்தார் அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. கத்தாரில் கால்பந்து ரசிகர், ரசிகைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிகள் கடுமையான பின்பற்றப்பட்டன. தோளில் இருந்து முழங்கால் வரையில் மறைக்கும் வகையில் ஆடைகள் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேலாடையை கழற்றி ஆடிய ரசிகையின் வீடியோ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கத்தார் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். இதனால் சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணைப் பற்றி விவாதம் நடந்து வருகிறது. அப்பெண்ணின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனப் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னதாக குரோஷியா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி இவானா நோல், தனது நாடு உலகக்கோப்பையை கைப்பற்றினால், மைதானத்திலிருந்து நிர்வாணமாக செல்வேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அனால், அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறியது குரோஷியா அணி.

தவற விடாதீர்: `இதலாம் இந்தியாலதான் சாத்தியம்...’ மெஸ்சி, எம்பாப்வே ஜெர்சியுடன் திருமணம் செய்த இணையர்கள்!