இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரில் யார் ஒருவர் மற்றொருவரை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பான போட்டியை நடத்தி அது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் தற்போது இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம், விராட் மற்றும் அனுஷ்கா ஷர்மாக்கிடையில் ஒரு போட்டியை நடத்தியுள்ளது. இதில் மொத்தம் மூன்று சுற்றுகள் இடம்பெற்றன. முதல் சுற்றில் சினிமா மற்றும் கிரிக்கெட் சார்ந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். இரண்டாவது சுற்றில் ரேபிட் பையர் முறையில் கேள்விள் அமைந்தன. மூன்றாவது சுற்றில் இருவருக்கும் இடையேயான பர்சனல் சார்ந்த கேள்விகள் அமைந்தன. இது தொடர்பான 6.32 நிமிடம் கொண்ட வீடியோவை டேக் எ ப்ரேக் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் அதனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் இருவருக்கும் இடையே சண்டை வந்தால் நான்தான் முதல்ல சாரி கேட்பேன் என அனுஷ்கா ஷர்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.