விளையாட்டு

கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா

கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா

webteam

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து இலங்கையின் கண்டியில் மரக்கன்றை நட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை சந்திப்பதற்காக, அவர் காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ரகசியமாக இலங்கை சென்றுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை சினிமா வட்டாரம் தெரிவித்தது.

இந்நிலையில், இலங்கையின் கண்டியில் இந்த காதல் ஜோடி சேர்ந்து மரக்கன்று நடுவது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு, ஓய்வு கிடைக்கும் நேரங்களில் காதலி அனுஷ்காவுடன், விராட் கோலி நேரத்தை செலவிட்டு வருகிறார்.