விளையாட்டு

விராத் - ரோகித் பனிப்போர் முற்றுகிறதா?

விராத் - ரோகித் பனிப்போர் முற்றுகிறதா?

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்குமான பனிப் போர் அதிகரித்துள் ளதாகக் கூறப்படுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்ற பின், அணிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோகித்தின் ஆலோசனையை விராத் ஏற்கவில்லை என்றும் இதனால்தான் பிரச்னை என்றும் தெரிகிறது. ஆனால், உலகக் கோப்பை தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்குவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது. இதை மீறி மூத்த வீரர் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்தே அணிக்குள் பிரச்னை என்றும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்களும் கேப்டன் விராத் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் தனித் தனியாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது.  விராத் -ரோகித் விரிசல் இப்போது அதிகரித்து இருப்பதாகவும் இருவருக்குமான பனிப்போர் முற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அவரை பின் தொடர்வதில் இருந்து ரோகித் வெளியேறி இருக்கிறார். விராத் கோலியின் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து முன்பே விலகி விட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இவர்கள் பிரச்னை முற்றி யுள்ளதாகத் தெரிகிறது. 

ரோகித் சர்மா, விராத் கோலி இடையிலான பிரச்னை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும்போது, ‘இது உங்களால் உருவாக்கப்படும் கதை’ என்றார்.

விராத், அனுஷ்காவைப் பின் தொடர்வதில் இருந்து ரோகித் விலகினாலும், விராத் கோலி, ரோகித்தை பின்தொடர்ந்து வரு கிறார்.

இந்நிலையில் இவர்கள் பிரச்னைக்கு வலு சேர்ப்பது போல அமைந்திருக்கிறது, சமீபத்தில் அனுஷ்கா சர்மாவின், வலத்தளப் பதிவு. ‘புத்திசாலி மனிதன், இந்த நேரத்தில் அமைதியாகத்தான் இருப்பான். தவறான தகவல்கள் வெளிவரும்போது, உண்மை யால் மட்டுமே மவுனத்துடன் கைகுலுக்க முடியும்’ என்று தெரிவித்திருக்கிறார்.