விளையாட்டு

உலக குத்துச்சண்டை போட்டி: பட்டத்தை வென்றார் ஆண்டனி ஜோஸ்வா

உலக குத்துச்சண்டை போட்டி: பட்டத்தை வென்றார் ஆண்டனி ஜோஸ்வா

webteam

உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஆண்டனி ஜோஸ்வா தக்கவைத்துக் கொண்டார்.

கார்டிஃப் நகரில் நடைபெற்ற உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் பிரான்ஸ் வீரர் பிரான்ஸ் வீரர் கார்லோஸ் டக்காமை எதிர்த்து பிரிட்டன் வீரர் ஆண்டனி ஜோஸ்வா விளையாடினார். போட்டியின் 10-வது சுற்றின் போது ஜோஸ்வா விட்ட குத்தில் டாக்காமுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர்கள் ‌ஆண்டனி ஜோஸ்வா வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதனையடுத்து ஐபிஎஃப், டபில்யூபிஏ, ஐபிஓ பட்டங்களை ஜோஸ்வா தக்கவைத்துக் கொண்டார்.